search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேங்கர் லாரி"

    மீஞ்சூர் அருகே டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் டீசல், பெட்ரோல் திருடப்படுவதாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர்கூட்டுசாலை அருகில் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் டீசல், பெட்ரோல் திருடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது லாரிகளில் இருந்து நூதன முறையில் பெட்ரோல் திருடிக் கொண்டிருந்த 13 பேரை கைது செய்தனர். அவர்கள் கவுண்டர்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார், வண்டலூர் பாண்டு, டிரைவர் திருவண்ணாமலை கார்த்தி, பாடி கணேசன், ஏழுமலை, அத்திப்பட்டு புதுநகர் சந்தோஷ், கார்த்திக், பெருமாள், அய்யனார், சிவா, பிரவீண்குமார், மீஞ்சூர் கோபால், வெங்கடேச பாண்டி என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து டீசல், பைப், பேரல்கள் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    பெட்ரோல், டீசல் டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இந்துஸ்தான் பெட்ரோலிய கழகத்தின் எண்ணெய் கிடங்கு உள்ளது. இங்கிருந்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்துக்கும் பெட்ரோல், டீசல் சப்ளை செய்ய தனியார் டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.

    இந்த ஒப்பந்தம் வரும் செப்டம்பர் 30-ந் தேதியுடன் முடிவடைவதால் அடுத்த 5 ஆண்டுக்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன.

    அதில் வங்கி உத்தரவாத தொகையை குறைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 9-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், இந்துஸ்தான் பெட்ரோலிய கழகத்தின் துணை பொதுமேலாளர் நாராயணராவ் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி டி.ராஜா நேற்று விசாரித்தார். அப்போது புதிய ஒப்பந்த விதிமுறைகள் எந்த விதத்திலும் தற்போதுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதையடுத்து நீதிபதி, பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்
    சென்னையில் இருந்து திருச்சிக்கு மாங்காய் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து திருச்சிக்கு மாங்காய் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

    இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

    சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவில் மாங்காய் ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ஆட்டோ புறப்பட்டது. ஆட்டோவை காஞ்சீபுரம் மாவட்டம் கோட்டைகாடு பகுதியை சேர்ந்த சண்முகம்(வயது 48) ஓட்டினார். அவருடன் சேம்பலிபுரத்தை சேர்ந்த கண்ணன்(25) வந்தார். மரக்காணம் செட்டிநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று அதிகாலை 4 மணியளவில் சரக்கு ஆட்டோ வந்த போது எதிரே ஒரு டேங்கர் லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்கு ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதியது.

    இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது. அதில் இருந்த டிரைவர் சண்முகம் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து டேங்கர்லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா பகுதியில் அதிவேகமாக இயக்கப்பட்ட டேங்கர் லாரி மோதியதில் முதியவர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #UPaccident
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா பகுதியில் நேற்று நள்ளிரவு சாலையில் அதிவேகமாக வந்த லாரி அப்பகுதியில் இருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்தில் காவலர் பணிக்கு தேர்வு எழுதிவிட்டு திரும்பியவர்கள் 3 பேர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து தொடர்பாக விருந்தாவன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்படும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். #UPaccident
    ×